உக்கடத்தில் பி.ஏ. கார்ஸ் புதிய விற்பனை மையத்தை அமைச்சர் விக்னேஷ் துவக்கி வைத்தார்..!
கோவை உக்கடம் நியூ மார்க்கெட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பி.ஏ. கார்ஸ் மற்றும் இருசக்கர வாகன அலங்காரப் பொருட்கள் விற்பனை மையத்தை, தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் திறந்து வைத்தார்.
கோவையின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக விளங்கும் உக்கடம் நியூ மார்க்கெட்டிற்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பராமரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பி.ஏ. கார்ஸ் விற்பனை மையத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான சீட் கவர்கள், ஃப்ளோர் மேட்கள், ஸ்டீயரிங் கவர்கள், பாடி ஸ்டிக்கர்கள், மியூசிக் சிஸ்டம்கள், ஸ்பீக்கர்கள், லைட்டிங் பொருட்கள், மொபைல் ஹோல்டர்கள், சார்ஜர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரமான அலங்கார மற்றும் பயன்பாட்டுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என பி.ஏ. கார்ஸ் உரிமையாளர் சுஹைல் தெரிவித்தார்.
விழாவில், இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுல்தான அமீர், த.மு.மு.க., கோவை மாவட்டத் தலைவர் பஷீர் அகமது, எஸ்.டி.பி.ஐ., கோவை மாவட்டத் தலைவர் இஷாக் அகமது, முஸ்லிம் லீக் கோவை மாவட்டத் தலைவர் அப்துல் கபூர், சுன்னத் ஜமாத் கொள்கைக் கூட்டமைப்புச் செயலாளர் பைசல், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்டத் தலைவர் காஜா உசேன், 86வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், உக்கடம் நியூ மார்க்கெட் சங்கக் கவுரவத் தலைவர் உசேன், துணைச் செயலாளர் அசன், பி.ஏ. அக்பர் அலி, மார்க்கெட் ஒருங்கிணைப்பாளர்கள் ஜக்கரியா, ஜெய்னும், இலியாஸ் மற்றும் நிர்வாகிகள் ராஜா முஹம்மது அஷ்ரப், ஜமால், யாசர் அரஃபா, முஜீப் ரஹ்மான், ரியாஸ், ரிஸ்வான், அசாருதீன், துபைல் அகமது, யஹ்யா, அயாஷ், சகில், பாசில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0