கோவையில் முதல் முறையாக நீலம்பூர் கார்த்திபுரத்தில் ஒரே நேரத்தில் 7 மைதானங்களில் பிரமாண்டமாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில்...!
கார்ப்பரேட் ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் ரியம் ஸ்போர்ட்ஸ் இணைந்து, பெட்ரோஸ்கி குரூப் ஆஃப் கம்பெனீஸ் வழங்கும் ‘இண்டிபெண்டன்ஸ் கிரிக்கெட் கப்’ கிரிக்கெட் போட்டிகள், கோவை நீலம்பூர் கார்த்திபுரத்தில் நடைபெற்று வந்தது.
அனைத்து போட்டிகளும் கார்த்திபுரம் டவுன்ஷிப் மைதானத்தில் நடைபெற்றது. இதில், கிர்டிலால்ஸ், அரோமா, ஏபிடி மாருதி, அகர்வால் ஸ்வீட் பேலஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி, ரமணி கார்ஸ் மற்றும் இண்டஸ் நோவேட்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆதரவு வழங்குகியது,
மொத்தமாக, 120 கிரிக்கெட் அணிகள், 10 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக, நடைபெற்றதில் கலந்து கொண்டனர் பல்வேறு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் போட்டிகள், செப் 6, 12, 13 ஆகிய தேதிகளில் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. தொடர்ந்து, காலிறுதி மற்றும் அரையிறுதி, மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெற்றது, இதில முதலிடம் பிடித்த அணிக்கு, ரூ.50 ஆயிரம் ரூபாய், ரொக்கமும், ‘இண்டிபெண்டன்ஸ் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த அணிக்கு, ரூ.30 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பரிசுக்கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த அணிக்கு, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசுடன் பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது.
இளைஞர்களை விளையாட்டின் பக்கம் ஈர்த்து, போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிர்த்து, போதை இல்லாத எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் இக்கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது. கோவை நீலம்பூர் கார்த்திபுரத்தில் ஒரே நேரத்தில் 7 மைதானங்களில் மிகப் பிரமாண்டமாக நடந்த, இந்த கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசை ப்ரோபெல் நிறுவன ஊழியர்கள் தட்டி சென்றனர் இவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும், கோப்பைகளும் வழங்க பட்டது. இரண்டாவது இடத்தை விப்ரோ நிறுவன ஊழியர்கள் அணி பிடித்தது. இவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் பணமும் கோப்பைகளும் வழங்க பட்டது. தொடர்ச்சியாக மூன்றாம் இடம், நாண்காம் இடம் பிடித்த அணிகளுக்கும் கோப்பைகளுடன் படமுடிச்சுக்களும் வழங்க பட்டது என்பது சிறத்த பந்து வீச்சாளர்கள், மற்றும் பேட்ஸ்மென்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0