குழந்தைகளுக்காக ஓடிய கோவை மக்கள்! ஜி.கே.என்.எம். ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தானில் 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Sep 27, 2026 - 17:23
Sep 27, 2026 - 18:08
 0  5

கோவை, குழந்தைகளின் இதயக் குறைபாடுகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் 4-வது ஆண்டு ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான் கோவையில் நடைபெற்றது.

பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய மாரத்தானில், கோவை மற்றும் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3,500-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

1, 3, 5 மற்றும் 10 கிலோமீட்டர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தானில், குழந்தைகளுடன் பெற்றோர்களும் உற்சாகமாக ஓடினர்.

குறிப்பாக, இதயக் குறைபாடு மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும், அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

‘சிறு இதயங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு’ என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி, சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவ பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தான் மூலம் திரட்டப்பட்ட நிதியில் 42 குழந்தைகள் பயனடைந்ததாக ஜி.கே.என்.எம். மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தெரிவித்தார்.

மேலும், ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய சிகிச்சையும், 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புற்றுநோய் சிகிச்சையும் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மாரத்தானை கோவை மாநகர காவல்துறை உதவி கமிஷனர் ஆர். கோகுலகிருஷ்ணன், டாக்டர் ரகுபதி வேலுசாமி, பிரீமியர் ஃபைன் லினன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சாந்தி சீனிவாசன் மற்றும் மூத்த மருத்துவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

குழந்தைகளுக்காக ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து ஓடிய இந்த மாரத்தான்...

விழிப்புணர்வை மட்டுமல்ல... சிகிச்சைக்காக போராடும் சிறு இதயங்களுக்கு நம்பிக்கையையும் விதைத்தது!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0