100% தேர்ச்சி… பின்னால் நின்ற ஆசிரியர்கள்! ஜூவல் ஒன் சார்பில் கோவையில் கவுரவம்..!
கடந்த கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து, அயராது பணியாற்றிய ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில் ஆசிரியர்களை பாராட்டும் விழா கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
வகுப்பறைகளில் மாணவர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து, அவர்களின் கனவுகளை வளர்த்து, சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், கடந்த கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட ஆசிரியர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு, விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கூறியதாவது:
ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில் ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமை கொள்கிறோம். கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை தேர்வு செய்து, அந்த மாணவர்களின் வெற்றிக்கு பின்னால் உறுதுணையாக நின்ற ஆசிரியர்களை மேடைக்கு அழைத்து கவுரவித்தோம்.
ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, அவர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர்களை பெருமைப்படுத்துவது நமது சமூகப் பொறுப்பு. அந்த சமூகப் பணியை ஆசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடியதில் ஜூவல் ஒன் நிறுவனமும் பெருமை கொள்கிறது, என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0