கள்ளச்சந்தையில் மது விற்பனை 50 மது பாட்டில்களுடன் பெண் கைது..!

Sep 2, 2026 - 07:08
 0  5
கள்ளச்சந்தையில் மது விற்பனை 50 மது பாட்டில்களுடன் பெண் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே, கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பைநல்லூர் பகுதியில், சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உத்தரமேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார், குப்பைநல்லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தேவகி என்பவர் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, தேவகியை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0