கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்!

Sep 3, 2026 - 20:36
 0  10
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்!

கோவை மாவட்டம் ஹோப் காலேஜ் மணி மஹாலில் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசு துறைகள் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்,மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.

இம்மாமில் சிறப்பு மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளை ஆய்வு செய்து மருத்துவ சான்றிதழ் வழங்கினர். மேலும் ஆதாரில் பிழை திருத்தங்கள் செய்தல் மற்றும் பதிவு செய்தல்,முதலமைச்சர் காப்பீடு அட்டை பதிவு செய்தல், இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் இ-சேவை மூலம் பதிவு செய்யப்பட்டது. பல்வேறு அரசுத் துறைகள்,மாற்றுத்திறனாளித்துறை,மருத்துவத்துறை வருவாய்த்துறை,நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறை,மாவட்ட தொழில் மையம்,வேலை வாய்ப்பு பயிற்சித்துறை,முன்னோடி வங்கி கூட்டுறவு வங்கி,தாட்கோ, ஆவின்,தொழிலாளர் நலத்துறை,சமூக நலத்துறை,கல்வித்துறை,மின்சார வாரியம் போன்ற துறை அலுவலகர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் விண்ணப்பங்களை பெறப்பட்டது.

இதில் பொது மருத்துவர் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

முகாமில் வசந்த ராம்குமார் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்,கிழக்கு மண்டல தலைவர்,53 வது வார்டு கவுன்சிலர் எம் டி மோகன்,கிழக்கு மண்டல அலுவலர்கள் மற்றும் பெண் பணியாளர்கள்,சமூக பாதுகாப்பு திட்டம்,உரிமைகள் திட்ட பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.இம்மாமில் 300 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0