கே.எம்.சி.ஹெச். மருந்தியல், இயன்முறை மருத்துவக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா...!

Aug 22, 2026 - 16:31
 0  23

கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள கே.எம்.சி.ஹெச். மருந்தியல் கல்லூரி மற்றும் கே.எம்.சி.ஹெச். இயன்முறை மருத்துவக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கே.எம்.சி.ஹெச். மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ. ராஜசேகரன் வரவேற்புரை வழங்கினார். கே.எம்.சி.ஹெச். மருந்தியல் கல்லூரி மற்றும் கே.எம்.சி.ஹெச். மனம், இயன்முறை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி விழாவிற்கு தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.

விழாவில் மணிபால் உயர்கல்வி அகாடமியின் துணைவேந்தர் டாக்டர் சரத்குமார் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பட்டதாரிகளுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “பட்டம் பெற்ற புதிய பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வி மற்றும் பெற்ற அறிவை மக்களுக்குப் பயனுள்ள வகையிலும், பொதுச் சுகாதார மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்புடன் பயன்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

விழாவில் மருந்தியல் மற்றும் இயன்முறை மருத்துவத் துறைகளைச் சேர்ந்த 241 இளநிலை பட்டதாரிகள் மற்றும் 173 முதுநிலை பட்டதாரிகள் என மொத்தம் 414 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும், பல்கலைக்கழக அளவிலான தரவரிசையில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற 8 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

முன்னதாக, டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் டாக்டர் மோகன் சேதுபதி, டாக்டர் அருண் என். பழனிசாமி மற்றும் திருமதி மதுரா வி. பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கே.எம்.சி.ஹெச். இயன்முறை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் முதல்வருமான டாக்டர் கார்த்திக் பாபு எஸ். நன்றியுரை வழங்கினார். தொடர்ந்து தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

விழாவில் டாக்டர் ஓ.டி. புவனேஸ்வரன், முதன்மை செயல் அலுவலர், டாக்டர் எம். நடேசன், தலைமை இயக்க அதிகாரி, டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள், பல்வேறு சுகாதார அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0