ஸ்டேன்ஸ் பள்ளியின் 164வது ஆண்டு விழா

Aug 23, 2026 - 11:59
 0  6
ஸ்டேன்ஸ் பள்ளியின் 164வது ஆண்டு விழா
ஸ்டேன்ஸ் பள்ளியின் 164வது ஆண்டு விழா
ஸ்டேன்ஸ் பள்ளியின் 164வது ஆண்டு விழா
ஸ்டேன்ஸ் பள்ளியின் 164வது ஆண்டு விழா
ஸ்டேன்ஸ் பள்ளியின் 164வது ஆண்டு விழா
ஸ்டேன்ஸ் பள்ளியின் 164வது ஆண்டு விழா

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 164வது ஆண்டு விழா, பள்ளியின் கல்விப் பாரம்பரியம் மற்றும் மாணவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையில் நடைபெற்றது. பள்ளிப் பாடலுடன் விழா தொடங்கியது.

விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஓமன் தலைமை வகித்தார். தாளாளர் பிலிப் ஆர்.ஜே. ஃபவுலர், நிர்வாகக்குழு உறுப்பினர் சுசிதா ராமச்சந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி வி.எம். ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பி.ஏ. ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஐலீன் ஜெத்ரோ, ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ், ஸ்டேன்ஸ் சர்வதேசப் பள்ளி முதல்வர் ஜார்ஜினா, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ராஜ்குமார், டி. ஸ்டேன்ஸ் அண்ட் கம்பெனியின் முழுநேர இயக்குநர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கேஎம்சிஹெச் மருத்துவமனையின் மூத்த மனநல ஆலோசகரும், நேர்மறை உளவியல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், மாணவர்களிடையே சுதந்திரம், ஒழுக்கம், உணர்வுசார் நல்வாழ்வு மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். உண்மையான சுதந்திரம் என்பது விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாத நிலை அல்ல என்றும், வெளிப்புறக் கட்டுப்பாட்டிலிருந்து சுயக்கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறுவதே உண்மையான சுதந்திரம் என்றும் தெரிவித்தார்.

குழந்தைகளின் தவறுகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் தவறுகளைத் திருத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தினார். தண்டனை தற்காலிகமாக முடிவுகளைத் தரக்கூடும் என்றாலும், நீண்ட காலத்தில் அதிருப்தி, பின்வாங்குதல் மற்றும் பழிவாங்கும் மனப்பான்மை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

மேலும், மாணவர்களின் சுயமரியாதை, சுயமதிப்பு, உணர்ச்சிகளைக் கையாளும் திறன், சமூகத் திறன்கள், விளையாட்டு மற்றும் மன உறுதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். குழந்தைகள் வார்த்தைகளைவிட பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளையே அதிகம் பின்பற்றுவார்கள் என்பதால், பெரியவர்கள் நேர்மறையான முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விழாவில் கல்வித் திறன் மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்காக மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வியில் சிறந்த செயல்பாட்டிற்கான 'ஹவுஸ்' விருதை டைகர் ஹவுஸ் அணி பெற்றது.

முன்னதாக பள்ளி முதல்வர் பி.ஏ. ஜான் ஸ்டீபன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, நடப்பாண்டில் பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

விழாவில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0