போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க, ஹெல்மெட் அணிதல் விழிப்புணர்வு பிரச்சாரம்...!

Sep 9, 2026 - 20:07
 0  8
போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க, ஹெல்மெட் அணிதல் விழிப்புணர்வு பிரச்சாரம்...!

கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.

இதில் போலீசார் மற்றும் மாணவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிதல்,இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிதல்,செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுதல்,வேகக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல்,நடந்து செல்லும் பொழுது சிக்னலை கவனித்து செல்லவும் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர்.

மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்,போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துகளைத் தவிர்க்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் முதல் நிலை காவலர், பாலாஜி உயிர் அமைப்பு மற்றும் டெக் சிட்டி ஆர்ஸ் &சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0