கோவையில் மனை தொழில் செய்வோருக்கு புதிய அணி! அமைச்சர் சம்பத்குமார் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!”

Sep 21, 2026 - 09:40
 0  113
கோவையில் மனை தொழில் செய்வோருக்கு புதிய அணி! அமைச்சர் சம்பத்குமார் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!”
கோவையில் மனை தொழில் செய்வோருக்கு புதிய அணி! அமைச்சர் சம்பத்குமார் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!”
கோவையில் மனை தொழில் செய்வோருக்கு புதிய அணி! அமைச்சர் சம்பத்குமார் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!”

கோவை இரத்தினபுரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

சங்கத்தின் மாநில தலைவர் ராக்கி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில செயல் தலைவர் டாக்டர் ஜி. முகமது ரபீக், மாநில பொருளாளர் மயிலை செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ராம வெங்கடேசன் வரவேற்புரை வழங்கினார்.கவுரவ அழைப்பாளர்களாக தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், சங்க ஆலோசகர்கள் ஏர்போர்ட் ராஜேந்திரன், விருகை கண்ணன், மெடிக்கல் நாராயணன், லயன் அருள்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வாழ்த்திப் பேசினார்.மேலும், காவேரி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 7 லேயர் ஸ்டார்ஷிப் ஆன்டி-மைக்ரோபியல் அதிநவீன தண்ணீர் தொட்டியையும் அமைச்சர் சம்பத்குமார் அறிமுகம் செய்து வைத்தார். காவேரி குழுமங்களின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் உடனிருந்தார்.

இதில், கோவை வடக்கு மாவட்ட தலைவராக கருப்பு சாமி, செயலாளராக கோவை கதிர்வேல், பொருளாளராக ஆத்மா சம்பத், அமைப்பு செயலாளராக அழகப்பன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.துணைத் தலைவர்களாக ராமச்சந்திரன், கார்த்திக், ஜோதிமணி, உமர்சா, மாடசாமி, சுந்தரம் ஆகியோரும், இணைச் செயலாளர்களாக ஸ்ரீ சக்திவேல், ராஜா பட்டாசு பாலு, சீனிவாசன், கார்த்திகேயன், ரமேஷ், வசந்த் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.

துணை செயலாளர்களாக கணேஷ்குமார், சுக்கூர் பாய், முத்து, பாலமுருகன், பிரகாஷ், கோபிநாத், கவியரசன், அருண்குமார், முருகவேணி, வீரலட்சுமி, மாசிலாமணி, கற்பகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ரேரா மற்றும் மனை வரன்முறை உள்ளிட்ட அரசு விதிகளை முறையாக பின்பற்றுதல், பத்திரப்பதிவு மூலம் அரசு வருவாயை அதிகரித்தல், அரசுக்கும் தொழில் செய்வோருக்கும் பாலமாக செயல்படுதல், அங்கீகரிக்கப்பட்ட மனைகளை மட்டுமே விற்பனை செய்தல், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1