மணப்பெண்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! ஒரே இடத்தில் 5,000 சதுர அடியில் திருமண நகைக் கண்காட்சி!

Oct 10, 2026 - 15:50
 0  11
மணப்பெண்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! ஒரே இடத்தில் 5,000 சதுர அடியில் திருமண நகைக் கண்காட்சி!
மணப்பெண்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! ஒரே இடத்தில் 5,000 சதுர அடியில் திருமண நகைக் கண்காட்சி!
மணப்பெண்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! ஒரே இடத்தில் 5,000 சதுர அடியில் திருமண நகைக் கண்காட்சி!
மணப்பெண்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! ஒரே இடத்தில் 5,000 சதுர அடியில் திருமண நகைக் கண்காட்சி!
மணப்பெண்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! ஒரே இடத்தில் 5,000 சதுர அடியில் திருமண நகைக் கண்காட்சி!

கோவையில் தனிஷ்க் நிறுவனத்தின் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி தாஜ் விவாந்தா நட்சத்திர ஓட்டலில் தொடங்கியது. அக்டோபர் 10 முதல் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், மணப்பெண் களுக்கான பாரம்பரிய மற்றும் நவீன நகை வடிவமைப்புகள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன.சுமார் 5,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் திருமண மரபுகள் மற்றும் சடங்குகளுக்கு ஏற்ற வகையில் பிரத்யேக நகைத் தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரிய தங்க நகைகள், குந்தன், போல்கி, நவரத்தினம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன.

கோயில் வடிவமைப்புகள், மலர்கள், மயில் உருவங்கள் மற்றும் நுணுக்கமான கைவினை வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட நகைகள் தனி கவனம் பெற்றுள்ளன. மணப்பெண்களுக்கான கழுத்தணிகள், அடுக்கு ஆரங்கள், வளையல்கள், நெற்றிச்சுட்டி, மாதா பட்டி உள்ளிட்ட பாரம்பரிய அணிகலன்களுடன், நவீன வடிவமைப்பிலான ஆபரணங்களும் இடம்பெற்றுள்ளன. திருமணத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்ற நகைகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பை இக்கண்காட்சி வழங்குகிறது.

இதுகுறித்து தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார வணிக மேலாளர் டி. சந்திரசேகர் கூறுகையில், “தமிழ்நாட்டின் திருமண மரபுகள் பாரம்பரியம் மற்றும் கைவினைத் திறனுடன் நெருங்கிய தொடர்புடையவை. இந்த மரபுகளைக் கொண்டாடுவதுடன், இன்றைய மணப்பெண்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும் ரிவா திருமண நகைக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்குத் தேவையான பல்வேறு வகையான நகைகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பு மணப்பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கிடைக்கிறது,” என்றார்.

தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாடு நகைத் தயாரிப்புப் பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் ஈ.ஏ.எஸ். கூறுகையில், கோவை வாடிக்கையாளர்கள் தங்களது திருமணத்திற்குத் தேவையான நகைகளை எளிதாகத் தேர்வு செய்யும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய நகைகள் முதல் நவீன வடிவமைப்புகள் வரையிலான பல்வேறு ஆபரணங்கள் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், கண்காட்சிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குப் பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டம் உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் 67 விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வரும் தனிஷ்க் நிறுவனம், தனது பிரத்யேக திருமண நகைத் தொகுப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழகத்தில் முதல் முறையாக இத்தகைய கண்காட்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0