கோவையில் கம்பீரமாக எழுந்த ஈட்டி எறிதல் வீரர் சிலை! விளையாட்டு வீரர்களுக்கு புதிய ஊக்கம்!

Sep 15, 2026 - 13:26
 0  10

கோவை மாநகரின் முக்கியப் பகுதியான வ.உ.சி., ரவுண்டானா பகுதியில், விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும், இளைய தலைமுறையினரிடையே ஈட்டி எறிதல் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அட்ரஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நவீன ஈட்டி எறிதல் வீரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.

கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, கோவை நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அமையும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

விழாவில் அட்ரஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கோவை நகரின் வளர்ச்சி மற்றும் அழகுபடுத்தும் பணிகளில் நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவை சாய் அபிமான் அட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தேன்மொழி தினேஷ்குமார் ஒருங்கிணைத்தார். விழாவில் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0