பேரூர் அருந்ததியர் சமூக மடத்தில் காந்தி ஜெயந்தி விழா!

Oct 3, 2026 - 07:07
 0  4
பேரூர் அருந்ததியர் சமூக மடத்தில் காந்தி ஜெயந்தி விழா!

கோயம்புத்தூர் சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் அருந்ததியர் சமூக மடத்தில், அண்ணல் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா மற்றும் மாதாந்திர நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.விழாவையொட்டி, மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மடத்தின் நிர்வாகக் குழுவின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பேரூர் அருந்ததியர் சமூக மடத்தின் தலைவரும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய உறுப்பினருமான எஸ். செல்வகுமார் தலைமை வகித்தார்.மடத்தின் துணைத் தலைவர் ரவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். கோல்டன் பொன்னுசாமி மற்றும் இ.பி. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூர் பேரூராட்சித் தலைவர் அண்ணாதுரை சிறப்புரை யாற்றினார்.நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, மத்திய கலால் துறையின் உதவி துணை ஆணையர் ஏ.ஆர்.ஆர். அறவாழி கலந்து கொண்டார்.அப்போது, மகாத்மா காந்தியின் உயரிய லட்சியமான தூய்மை பாரதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், ஸ்வச் பாரத் – தூய்மை பாரதம் உறுதிமொழியை அனைவரும் ஏற்கச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் வெள்ளிங்கிரி, அக்ரிசுந்தரம், மேகநாதன், துணைச் செயலாளர் திருமலைசாமி, துணைத் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், பேரூர் அருந்ததியர் சமூக மடத்தின் செயலாளர் மு. இளங்கோ கணேசன்,நிர்வாகக் குழுவினர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர் இறுதியாக,மடத்தின் பொருளாளர் ரங்கநாதன் நன்றியுரை கூறினார்.காந்தியின் தூய்மை பாரதக் கனவை முன்னெடுக்கும் வகையில், உறுதிமொழியுடன் காந்தி ஜெயந்தி விழா நிறைவு பெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0