இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது ஆண்டு மாநாடு!

Oct 9, 2026 - 16:33
 0  24
இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது ஆண்டு மாநாடு!
இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது ஆண்டு மாநாடு!
இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது ஆண்டு மாநாடு!

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது ஆண்டு மாநாடு அக்டோபர் 8 முதல் 10-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் தி.ச.க. மீனாட்சிசுந்தரம் தலைமை உரையாற்றினார். துணைவேந்தர் டாக்டர் வி. பாரதி ஹரிசங்கர் தொடக்க உரையாற்றினார். இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர் டாக்டர் சரத் கோபாலன், செயலாளர் டாக்டர் சுப்பாராவ் ஜி., பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் ஹை. இந்து ஆகியோர் பேசினர்.

என்ஐடிஐ ஆயோக் கௌரவ உறுப்பினர் டாக்டர் ஆ. ஸ்ரீனிவாஸ், அனைவருக்கும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதில் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. ராஜேஸ்வரி, மனையியல் புல முதன்மையர் பேராசிரியர் சில்வியா சுபப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் முக்கிய நோக்கமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வது வலியுறுத்தப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0