கோவை என்.ஜி.பி. கல்லூரியில் 2,324 மாணவர்களுக்குப் பட்டம்!

Oct 23, 2026 - 13:25
 0  20
கோவை என்.ஜி.பி. கல்லூரியில் 2,324 மாணவர்களுக்குப் பட்டம்!
கோவை என்.ஜி.பி. கல்லூரியில் 2,324 மாணவர்களுக்குப் பட்டம்!
கோவை என்.ஜி.பி. கல்லூரியில் 2,324 மாணவர்களுக்குப் பட்டம்!
கோவை என்.ஜி.பி. கல்லூரியில் 2,324 மாணவர்களுக்குப் பட்டம்!

கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள என்.ஜி.பி. கலையரங்கில் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது ஹைதராபாத் ஒஸ்மேனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குமார் மொலுகரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்று, பெற்றோரை மதித்து, குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் சிறந்த குடிமக்களாக உருவாக வேண்டும் என மருத்துவர் நல்ல பழனிசாமி அறிவுறுத்தினார். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி உயரிய இலக்குகளை அடையவும், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் செயல்படவும் பேராசிரியர் குமார் மொலுகரம் வலியுறுத்தினார்.

விழாவில், அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அலுவலர் முனைவர் ஓ.டி. புவனேஸ்வரன், துணைச் செயல் அலுவலர் முனைவர் மா. நடேசன், டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ.இரா. முத்துசாமி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சு. சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். முனைவர் பெ.இரா. முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் முனைவர் சு. சரவணன் கல்லூரியின் கல்விசார் சாதனைகளை எடுத்துரைத்தார்.

விழாவில், இளங்கலைப் பிரிவில் 2,044 பேரும், முதுகலைப் பிரிவில் 280 பேரும் என மொத்தம் 2,324 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், இளங்கலைப் பிரிவில் 60 பேரும், முதுகலைப் பிரிவில் 31 பேரும் முதலிடம் பெற்றுச் சிறப்பிக்கப்பட்டனர். மேலும், 10 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0