ரோபோ ‘நிலா’..ட்ரோன் மலர் தூவல்! கோவையில் களைகட்டிய ‘நக்‌சத்திரா 2026..!

Sep 21, 2026 - 20:45
 0  137
ரோபோ ‘நிலா’..ட்ரோன் மலர் தூவல்! கோவையில் களைகட்டிய ‘நக்‌சத்திரா 2026..!

கோவை: வேலந்தாவளம் சாலையில் அமைந்துள்ள தனிஷ் அகமது இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில், ‘நக்‌சத்திரா 2026’ புதுமுக மாணவர் வரவேற்பு விழா நடந்தது.மாணவர்களின் இறைவணக்கத்துடன் தொடங்கிய விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. விழாவின் சிறப்பம்சமாக, ‘நிலா’ என பெயரிடப்பட்ட ஊடாடும் மனித உருவ ரோபோ காட்சிப்படுத்தப்பட்டது.

 புதுமுக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவேற்கும் வகையில், ட்ரோன்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன விழாவில் வரவேற்புரையாற்றிய கல்லூரி இயக்குநர் டாக்டர் அருள் குழந்தைவேல், பொறியியல் கல்வியுடன் குழுவாக செயல்படும் திறன் மற்றும் புதிய திறன்களை தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கல்லூரியில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.21 லட்சம் ஊதியத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனிஷ் ஐடெக் தலைமைச் செயல் அலுவலர் ஏ.தமீஸ் அகமது, தொடர்ச்சியான கற்றல், புதுமையான சிந்தனை மற்றும் தொழில்சார் திறன் வளர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

விழாவுக்கு தலைமை வகித்த தனிஷ் ஐடெக் நிர்வாக இயக்குநர் கே.ஏ. அக்பர் பாஷா, தரமான கல்வியுடன் ஒழுக்கமும் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியம் என்றார். தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஒன்பது புதிய தலைமுறை பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன், மாணவர்கள் கல்லூரி வாழ்க்கையை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தினார்.

தலைமை விருந்தினராக பங்கேற்ற ஹேக்கப் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தினேஷ் பரந்தகன் (இந்தியா மற்றும் கனடா), செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த இணைய ஊடுருவல் துறைகளின் எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவர்களிடம் பேசினார்.

தொடர்ந்து கல்லூரியின் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் டாக்டர் ஜான் பாரூக் ஒருங்கிணைத்தார். அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் மற்றும் ஐக்யூஏசி தலைவர் டாக்டர் ஜெ. சதீஷ் குமார் நன்றி கூறினார்.விழாவின் ஒரு பகுதியாக முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்ற பலூன் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் தங்களது எதிர்கால இலக்குகளை பலூன்களில் எழுதி வானில் பறக்கவிட்டனர்.மாணவர்களின் புதிய கல்விப் பயணத்தை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் தொடங்கிவைத்த ‘நக்‌சத்திரா 2026’ விழா சிறப்பாக நிறைவடைந்தது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0