நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ் கோவையில் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை கோவையில் துவக்கியுள்ளது..!

Sep 28, 2026 - 18:55
 0  16
நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ்  கோவையில் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை கோவையில் துவக்கியுள்ளது..!

நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ் தற்போது கோவையில் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை துவக்கியுள்ளது. இந்தியா மட்டுமில்லாமல் பல வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து வரும் இவர்கள் எப்போதும் தரத்தில் சிறந்து விளங்கி வருகின்றனர். 4 தலைமுறைகளாக செயல்படும் டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ் சார்பில் தற்போது கோவை துடியலூர் அடுத்த வெள்ளகிணர் செல்லும் வழியில் ப்ளு ராபின் டீ லவுஞ்ச் என்ற புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை துவக்கியுள்ளது. இதனை துடியலூர் நியூலைப் சிட்டி சர்ச் ரெவண்ட். இம்மானுவேல் ஜெகப் பிரத்தினை செய்து தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ் ஓனர் தினேஷ்ராஜூ, சந்தியா தினேஷ், அபிநவ் தினேஷ் ஆகியோர் ரிப்பன் வெட்டி ப்ளு ராபின் டீ லவு ஞ்ச் என்ற புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை தொடங்கி வைத்தனார். இதில் மேத்யூ, ராகுல் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், வாடிக்கையாளர்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இந்த ப்ளு ராபின் டீ லவுஞ்ச் பற்றி ஓனர் தினேஷ்ராஜூ கூறும்போது, இந்த சென்டரில் 100 விதமான டீ எக்ஸ்பீரியன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு ள்ளது என்றும், டீ தோட்டத்தில் இருந்து எப்படி நாம் குடுக்கும் கப்பிற்கு வருகிறது என்பதையும், வாடிக்கையாளர்கள் தேயிலை தூள்கள் வாங்கும்போது, அதில் இருக்கும் கியூ ஆரை ஸ்கேன் செய்தால் இந்த டீ தூள் எங்கே, எப்போ எடுக்கப்பட்டது என்றும், எப்போ பேக்ட்ரிக்கு வந்தது என்றும், எப்போ வாடிக்கையாளர்கள் கைக்கு கிடைத்தது என்றும், டீ டெஸ்ட் ரிசல்ட்டுடன் எல்லாமே தெளிவாக தெரிந்துகொள்ளலாம். 

இதில் எதுவுமே மறைக்கப்படவில்லை என்பது உறுதியாக இருக்கும். நாம் சாப்பிடும் பொருள் தரமானதாகவும், உண்மையாகவும் உள்ளது என்பதை தெரிந்து வாடிக்கையாளர்கள் சாப்பிடலாம். பிளாக் டீ, ஐஸ் டீ, கிரீன் டீ, லேட்டாஸ்டாக உள்ள மாச்சா வரை பல வகையான டீ-க்கள் கிடைக்கும் என்று கூறினார். மேலும் டீ தயாரிக்கும்போது, எப்படி சுவையாக தயாரிக்கலாம், எந்தமாதிரி சூடு வேண்டும், எவ்வளவு தூள் போட வேண்டும், எப்போ சூட்டில் இருந்து இறக்கலாம் என்றும், நல்ல டீ தூளுக்கு, மற்ற தூளுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்கும் முறையையும் சொல்லி தருகிறோம் என்று தெரிவித்தார். 

தற்போது இங்கு 40க்கும் மேற்பட்ட வகையான தேயிலை தூள்கள் அதன் பெயருடன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு டீ, ஸ்னெக்ஸ், மாச்சா, காபி லாட்டே உள்ளிட்டவைகளும் கிடைக்கும். மேலும் நீலகிரி மாவட்ட குரும்பர் இன மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அந்த மக்கள் இயற்கையாக தயாரிக்கும் தேன், தையம் உள்ளிட்டவைகளும் மருத்துவர் பரிசோதனைக்கு பிறகு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0