5,000 வாடிக்கையாளர்கள்... இசை மழையில் ஜூவல் ஒன்! தங்க நாணயம், வெள்ளி நாணயம் என பரிசு மழை!
கோவை,தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தரப்பு மக்களும் தங்கம் வாங்கும் வகையில் 9, 14 மற்றும் 18 காரட் தரத்தில் பல்வேறு நகை வடிவமைப்புகளை ஜூவல் ஒன் ஜூவல்லரி அறிமுகப்படுத்தியுள்ளது. கோவையில் கடந்த 12 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள ஜூவல் ஒன் ஜூவல்லரி, வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈச்சனாரி ரத்தினம் அரங்கில் ‘இசை இரவு’ நிகழ்ச்சியை நடத்தியது. இதில் சுமார் 5,000 வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் தொலைக்காட்சி புகழ் ஸ்ரீதர்ஷனா, ஸ்ரீநிஷா, பிரியங்கா, பரத், லைனெட் உள்ளிட்டோர் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர். மேலும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கூறுகையில், “கடந்த 12 ஆண்டுகளாக எங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் இந்த இசை இரவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சமீபத்தில் கோவை கிராஸ்கட் சாலையில் 5 தளங்களுடன் கூடிய பிரமாண்ட பிளாக்ஷிப் ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு 22 காரட்டுடன், குறைந்த விலையில் வாங்கும் வகையில் 18 காரட் நகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து தரப்பு மக்களும் தங்கம் வாங்கும் வகையில் 9 மற்றும் 14 காரட் நகைகளும் உள்ளன” என்றார்.
பாடல், நடனம் மற்றும் பரிசுகளுடன் நடைபெற்ற இந்த இசை இரவு நிகழ்ச்சி, வாடிக்கையாளர்களின் உற்சாகமான பங்கேற்புடன் நிறைவடைந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0