தீபாவளி ஷாப்பிங் ஒரே இடத்தில் கண்காட்சியை திறந்து வைத்த லீமாரோஸ் எம்எல்ஏ...!
கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில், கோ கிளாம் நிறுவனத்தின் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சி அக்டோபர் 23-ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், கீர்த்தனா கார்த்திக், கவுரி, அலமேலு, மஞ்சுளா, ஜீவிதா, மஹிமா, சாய் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்தக் கண்காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், அணிகலன்கள், நகைகள், பரிசுப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கைப்பைகள், பிரத்யேக வடிவமைப்பிலான காலணிகள், ஜிமிக்கி, கம்மல், வளையல்கள் மற்றும் வெள்ளி அணிகலன்கள் எனப் பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன கொல்கத்தா, லூதியானா, குஜராத், டெல்லி, ஜெய்ப்பூர், புனே உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன ரக ஆடைகள் மற்றும் அணிகலன்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் கூறுகையில், அக்டோபர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் வாங்கும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், உதகை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து பொருட்களை வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0