மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்! கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Oct 22, 2026 - 15:44
Oct 22, 2026 - 16:04
 0  3

மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை காந்திபுரம் செம்மொழிப் பூங்காவில், கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு, கே.எம்.சி.எச். மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் அருண் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய அவர், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் மாதம் பிங்க் மாதமாகக் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.மேலும், மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், பெண்கள் உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.தொடர்ந்து, கே.எம்.சி.எச். மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் மையத்தில், மருத்துவ ஆலோசனை, பரிசோதனை, நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை என அனைத்து சேவைகளும், சிறந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஒரே இடத்தில் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் சரஸ்வதி கையெழுத்திட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவோம்... பெண்களின் ஆரோக்கியத்தைக் காப்போம்! என்ற விழிப்புணர்வு செய்தியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0