விஜிஎம் மருத்துவமனை சார்பாக, உலக இதய தின விழிப்புணர்வு பேரணி ... !
நாடு முழுவதும் செப்டம்பர் 29ஆம் தேதியை, உலக இருதயத்தனமாக கொண்டாடி வருகின்றோம் இந்த நாளில், இருதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுவதற்கும், தடுப்பு சுகாதாரத்தை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான இதயம் மற்றும் சிறந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்காகவும்,
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனை சார்பாக, உலக இதய தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தின் முன்பாக துவங்கிய இந்த பேரணி, பந்தய சாலையில் உள்ள மீடியா டவர் பகுதியில் நிறைவு பெற்றது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கொடியசைத்து துவக்கி வைத்ததுடன், தானும் நடந்து இது குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார்.
இந்த பேரணியில் சுமார், 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள், சுமார் கலந்து கொண்டு இருதயம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இருதய விழிப்புணர்வு குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் வி.ஜி மோகன் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. மாரடைப்பு, பக்கவாதம், மற்றும் பிற முக்கிய இதய நோய்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்றது. மேலும் இவை வாழ்வின் உச்சகட்டத்தில் இருக்கும் இந்தியர்களை பெருமளவில் தாக்குகின்றது. இதய நோய்கள் அமைதியான கொலையாளிகள் போல உருவாகி வருகின்றது. நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மற்றும் இயல்புக்கு மாறான கொலஸ்ட்ரால், ஆகியவை இதய நோய்களுக்கான அறிகுறியாக அமைந்து விடுகின்றது. எனவே உலக இதய தினத்தை முன்னிட்டு கோவையில் இதயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது, இதனை கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கொடியசைத்து துவக்கி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் விஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர்கள், சுமன், மதுரா பிரசாத் சுமன், வம்சி மூர்த்தி, மித்ரா பிரசாத், தர்மராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0