இந்தியாவிலேயே முதன்முறை! மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் கோவையில் களமிறங்கிய நவீன ரோபோ!

Sep 13, 2026 - 12:10
 0  3

கோவை இந்தியாவிலேயே முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான நான்காம் தலைமுறை ‘ஸ்ட்ரைக்கர் மாகோ 4 ஸ்மார்ட் ரோபோடிக்ஸ்’ தொழில்நுட்பம், கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற அறிமுக விழாவுக்கு, ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பங்கேற்று, புதிய ரோபோ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

அமெரிக்க நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பமான மாகோ 4 ரோபோடிக்ஸ் மூலம், நோயாளிகளின் உடலமைப்புக்கு ஏற்ப அறுவை சிகிச்சையை தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு, அதிக துல்லியத்துடன் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது. பகுதி முழங்கால், முழு முழங்கால், இடுப்பு, தோள்பட்டை உள்ளிட்ட பல்வேறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

விழாவில் பேசிய அமைச்சர் அருண் ராஜ், மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தமிழகம் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்வது பெருமைக்குரியது என்றார். தனியார் மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்படும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் பயன்கள் பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற தொழில்நுட்பங்களை விரைவில் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

டாக்டர் மாதேஸ்வரன், நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் ராயல் கேர் மருத்துவமனை தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருவதாக கூறினார்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் நடேசன், நோயாளியின் உடலமைப்புக்கு ஏற்ப அறுவை சிகிச்சையை திட்டமிடுவதுடன், சிக்கலான மறுமூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளையும் அதிக துல்லியத்துடன் மேற்கொள்ள மாகோ ரோபோ தொழில்நுட்பம் உதவும் என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0