குழந்தைகளுக்காக ஓடுவோம்! கோவையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான்!

Sep 15, 2026 - 13:32
 0  2
குழந்தைகளுக்காக ஓடுவோம்! கோவையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான்!
குழந்தைகளுக்காக ஓடுவோம்! கோவையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான்!
குழந்தைகளுக்காக ஓடுவோம்! கோவையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான்!

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில், குழந்தைகளின் இருதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான் போட்டியின் 4-வது பதிப்பு நடைபெறவுள்ளது.

கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாரத்தான், செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணிக்கு, பாப்பநாயக்கன் பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் தொடங்குகிறது.

இதில் குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் மூத்த குடிமக்கள் பங்கேற்கும் வகையில் 1 மற்றும் 3 கிலோமீட்டர் ஓட்டங்களும், 12 முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமியர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கான 5 கிலோமீட்டர் ஓட்டமும் நடைபெறுகிறது.மேலும்,18 முதல் 39 வயது மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கான 10 கிலோமீட்டர் ஓட்டமும் நடத்தப்படுகிறது.

5 மற்றும் 10 கிலோமீட்டர் பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த மாரத்தான் போட்டிக்கு கோவை மாவட்ட தடகள சங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாரத்தான் டி-ஷர்ட் மற்றும் பதக்கம் அறிமுக விழா, கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.அப்போது பேசிய ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றதாகவும், அதன் மூலம் திரட்டப்பட்ட நிதி இருதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவியதாகவும் தெரிவித்தார்.மேலும்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளும் இந்த ஆண்டும் மாரத்தானில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார்.

குழந்தைகளின் நலனுக்காக நடைபெறும் இந்த மாரத்தானில், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0