தாய்–சேய் நலனில் புதிய மைல்கல்! கோவையில் ராயல் கேர் மருத்துவமனையின் புதிய சாதனை...!

Oct 26, 2026 - 16:15
 0  2

கோவையில் உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்கி வரும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில், அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ராயல் கிரேடில் பிரசவ மையத்தை’ தொடங்கியுள்ளது. நீலாம்பூரில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா, கோவையின் மகப்பேறு மருத்துவக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்தது.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான, நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி, ரிப்பன் வெட்டி புதிய பிரசவ மையத்தைத் திறந்து வைத்தார். சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம். சுகுமார் கவுரவ விருந்தினராகப் பங்கேற்றார்.

விழாவில் பேசிய டாக்டர் கனிமொழி சந்தோஷ், தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, நவீன மருத்துவ வசதிகளுடன் புதிய பிரசவ மையத்தைத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது என்றார். தரமான மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்குக் கிடைப்பதில் இதுபோன்ற மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடுகள் முக்கியப் பங்கு வகிப்பதாக என்.எம். சுகுமார் தெரிவித்தார்.

தலைமையுரையாற்றிய டாக்டர் கே. மாதேஸ்வரன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்பும், பிரசவத்தின்போதும், பிரசவத்திற்குப் பின்பும் தேவையான மருத்துவப் பராமரிப்பை ஒருங்கிணைந்த முறையில் வழங்குவதே இம்மையத்தின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார். தாய் மற்றும் சேய் நலனை மையமாகக் கொண்டு, பாதுகாப்பான பிரசவ அனுபவத்தை வழங்கும் வகையில் இம்மையம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ராயல் கிரேடில் பிரசவ மையத்தில் நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய பிரத்யேகப் பிரசவ அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவத் தகுதி, தாயின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு, பிரசவ வலியின்போது நீரில் இருப்பது மற்றும் பொருத்தமான சூழலில் நீரில் குழந்தை பெற்றெடுப்பது போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், தாய்மார்களின் தேவைகளுக்கு ஏற்ப பிரசவப் பராமரிப்பை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இவ்விழாவில் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் டாக்டர் கல்யாண குமாரி, டாக்டர் கலைவாணி, டாக்டர் பிரேமலதா, டாக்டர் வினோதினி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, முதன்மைச் செயல் அதிகாரி மணி செந்தில்குமார், மார்க்கெட்டிங் பிரிவு மூத்த பொது மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

மருத்துவச் சேவையில் கோவையின் வளர்ச்சிக்குப் புதிய அடையாளம்

தாய் மற்றும் சேய் நலனுக்காக நவீன மருத்துவ வசதிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘ராயல் கிரேடில்’ பிரசவ மையம், கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மேம்பட்ட மகப்பேறு மருத்துவச் சேவைகளை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவத் துறையில் தொடர்ந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் ராயல் கேர் மருத்துவமனையின் இந்த முயற்சி, தாய்மார்களின் நலன் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0