1லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு! ரோட்டரி யுனைட் வனம் திட்டம் தொடக்கம்!

Oct 29, 2026 - 09:39
 0  1

கோவையில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் இலக்குடன், ‘ரோட்டரி யுனைட் வனம்’ என்ற புதிய பசுமைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், பேரூர்–செட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு பால கணபதி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.சிறுதுளி அமைப்பு, கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்துள்ளதுடன், 200-க்கும் மேற்பட்ட பசுமைப் பகுதிகளையும் உருவாக்கியுள்ளது.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பெ. ரமேஷ், ரோட்டரி மாவட்டம் 3206-ன் ஆளுநர் ரோட்டேரியன் ஆர்.எஸ். மாருதி, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.மேலும், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் வெஸ்ட் தலைவர் வி. சந்திரசேகர், செயலாளர் முத்தழகப்பன், சமூக சேவைப் பிரிவுத் தலைவர் சி.கே. சசிகுமார், திட்டத் தலைவர் பி.பி. சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு ரோட்டரி சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, வாழ்வாதார உதவி தேவைப்படும் குடும்பத்துக்கு மாவட்ட ஆட்சியர் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமூக நலனையும் இணைக்கும் இந்த முயற்சி, கோவையின் பசுமைப் பரப்பை அதிகரித்து, காற்று மாசுபாட்டைக் குறைத்து, எதிர்காலத் தலைமுறைக்குப் பசுமையான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0