அவேரா இருதய மருத்துவமனை திறப்பு..!
கோயம்புத்தூரில் முழுமையான இருதய சிகிச்சை சேவைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அவேரா இருதய மருத்துவமனை திறப்பு விழா, துடியலூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண் மஹாலில் நடைபெற்றது.30 ஆண்டுகால கனவின் நிறைவேற்றமாக அமைந்துள்ள இந்த மருத்துவமனையை, பன்னாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
விழாவில் சங்கரா கண் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர்.வி. ரமணி, பிரிகோல் லிமிடெட்டின் நிறுவனர் விஜய் மோகள், வி.எல்.பி. அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, பின்னணிப் பாடகி சுஜாதா மோகன், மேயோ கிளினிக்கின் கௌரவப் பேராசிரியர் டாக்டர் சந்திரசேகரன் கே. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மேலும், கோயம்புத்தூர் குஜராத்தி சமாஜத்தின் தலைவர் பிரஃபுல் சேஜ்பால் மற்றும் ராஜஸ்தானி சங்கத்தின் தலைவர் சந்தோஷ் முந்த்ரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
100 படுக்கைகள் கொண்ட அவேரா மருத்துவமனையில், இரண்டு பிலிப்ஸ் அஸூரியன் 7-சீரிஸ் கேத் லேப்கள், இரண்டு நவீன மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள், 18 படுக்கைகள் கொண்ட இருதய சிகிச்சைப் பிரிவு, 16 படுக்கைகள் கொண்ட இருதய-மார்பக அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பிரிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைந்த சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.இருதயவியல், இருதய-மார்பக அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை, அவசர மருத்துவம், கதிரியக்கவியல், நுரையீரல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. 24 மணி நேர மருந்தகம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளும் வழங்கப்படுகின்றன.
மருத்துவமனையின் தலைவரான டாக்டர் ராஜிபால் கே. அயைச்சந்தி, 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளில் அனுபவம் பெற்றவர்.தலைமை இருதய-மார்பக அறுவை சிகிச்சை நிபுணரும் இயக்குநருமான டாக்டர் சந்திரசேகர் பத்மநாபன், 34 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
நவீன தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களுடன், கோவை மக்களுக்கு முழுமையான இருதய சிகிச்சை சேவையை வழங்கும் முக்கிய மருத்துவ மையமாக அவேரா இருதய மருத்துவமனை உருவெடுத்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0