கோவையில் அசத்தல்! ஒரே நாளில் 200+ டிவிஎஸ் வாகனங்கள் டெலிவரி! வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு!
கோவை திருச்சி சாலை, சுங்கம் பகுதியில் அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் மற்றும் நவீன சேவை மையம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார் பங்கேற்று புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.
அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜு வி.பி., தலைமையில் நடைபெற்ற விழாவில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனைப் பிராந்திய மேலாளர் அபராஜித் சடகோபன், நவீன சேவை மையத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு ஏரியா மேலாளர் வினீத், சர்வீஸ் பிரிவு ஏரியா மேலாளர் ஸ்ரீனிவாசன், மதன், விக்னேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புதிய வளாகத்தில், இருசக்கர வாகன விற்பனை, பழுதுபார்ப்பு மற்றும் அசல் உதிரிபாகங்கள் விற்பனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே நாளில் 200 வாகனங்கள்!
விழாவின் சிறப்பம்சமாக, ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட டிவிஎஸ் இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. வாகனம் வாங்கிய ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது.
அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜு வி.பி., மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனைப் பிராந்திய மேலாளர் அபராஜித் சடகோபன் ஆகியோர் பேசுகையில், புதிய ஷோரூம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இருசக்கர வாகன விற்பனை முதல் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் வரை ஒருங்கிணைந்த, தரமான சேவைகளை வழங்குவதே முக்கிய நோக்கம் என்றனர்.
மேலும், அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வகையில் டிவிஎஸ் இருசக்கர வாகனங்கள் அமைந்துள்ளதாகவும், பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கும் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் சின்னியம்பாளையம், காளப்பட்டி, செட்டிபாளையம், கரூர், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை மற்றும் சேவை மையங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் அஸ்வதா டிவிஎஸ் நிறுவனம், தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்தப் புதிய ஷோரூம் மற்றும் நவீன சேவை மையத்தைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0