அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் ‘அசென்ட் 2026’ தொடக்க விழா...!

Sep 9, 2026 - 20:26
 0  15
அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் ‘அசென்ட் 2026’ தொடக்க விழா...!

கோவை அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மாணவர்களுக்கான ‘அசென்ட் 2026’ தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இரண்டாம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை மாணவி செல்வி வனிதாவின் நடன நிகழ்ச்சி விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.கல்லூரி முதல்வர் முனைவர் நா. ஜானகி மனோகர் வரவேற்புரையாற்றினார். கல்லூரித் தலைவர் சூரியநாராயண், அறங்காவலர் ராஜா, செயலாளர் முனைவர் ரா. சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முனைவர் எஸ். டி. கலையமுதன், வழக்கறிஞர், பட்டிமன்ற நடுவர், ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் சிகரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர், மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், மாணவர்கள் கல்வியுடன் தன்னம்பிக்கை, ஒழுக்கம், திறன், படைப்பாற்றல் மற்றும் தொடர் முயற்சி ஆகியவற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லூரிப் பருவத்தை எதிர்கால இலக்குகளை அடைவதற்கான சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.சிறப்பு விருந்தினரை தமிழ்த்துறைப் பேராசிரியர் மு. சிவசக்தி அறிமுகப்படுத்தினார். முனைவர் மு. ராகவேந்தர், அறிவியல் மற்றும் மனிதநேயத் துறைத் தலைவர், நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் கிறிஸ்டினா டேவிட் தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது.முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்லூரிப் பயணத்திற்கு உற்சாகமான தொடக்கமாக ‘அசென்ட் 2026’ அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0