மாணவர்களின் எதிர்காலத்துக்கு புதிய பாதை! 🔥 கோவையில் முன்னணி நிறுவனங்களுடன் ஆர்விஎஸ் கல்லூரி HR உச்சி மாநாடு!

Oct 24, 2026 - 14:36
 0  50

கோவை மாவட்டம், சூலூரில் உள்ள ஆர்விஎஸ் கலை அறிவியல் கல்லூரியில், அரேட் சர்க்கிள் தொடக்க விழா மற்றும் 'எச்.ஆர். சினர்ஜி உச்சி மாநாடு 2026' நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் உள்ள கலாம் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் மனிதவளத் துறை நிபுணர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் த. சிவகுமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரிச் செயலர் சாரம்மா சாமுவேல் தலைமை வகித்தார். வி. சங்கரநாராயணன், ஜெயஸ்ரீ, ராகுல் ஆகியோர் இணைந்து 'அரேட் சர்க்கிளை' தொடங்கி வைத்தனர்.தமிழக அரசின் மனிதவள மேலாண்மைப் பிரிவைச் சேர்ந்த டி. சரத்குமார் பேசுகையில், மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்து வதில் கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும், ஸோஹோ நிறுவன இயக்குநருமான ராஜேந்திரன் தண்டபாணி, தற்போதைய வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து எடுத்துரைத்தார்.

ஆக்சென்ச்சர் நிறுவன இணை இயக்குநர் முனைவர் கார்த்திகேயன் சௌந்தரராஜன், கியான்மேட்ரிக்ஸ் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ராஜன் பரசுராமன் ஆகியோர் தொழில்துறையின் தற்போதைய போக்குகள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில், 25 கல்லூரி இடங்களை ஒதுக்கீடு செய்யும் முயற்சி குறித்தும் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

குழு விவாதத்தில் பங்கேற்றவர்களுக்குச் சிறப்புச் செய்யப்பட்டது. தொடர்ந்து, நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

மாணவர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள்–தொழில்துறை இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாநாடு, மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1