100-க்கும் மேற்பட்ட அங்காடிகள்... மாணவர்களின் தொழில்முனைவோர் திறனை வெளிப்படுத்திய ‘ராயல் எக்ஸ்போ 2026’!

Sep 10, 2026 - 10:59
Sep 10, 2026 - 12:00
 0  55
100-க்கும் மேற்பட்ட அங்காடிகள்... மாணவர்களின் தொழில்முனைவோர் திறனை வெளிப்படுத்திய ‘ராயல் எக்ஸ்போ 2026’!
100-க்கும் மேற்பட்ட அங்காடிகள்... மாணவர்களின் தொழில்முனைவோர் திறனை வெளிப்படுத்திய ‘ராயல் எக்ஸ்போ 2026’!
100-க்கும் மேற்பட்ட அங்காடிகள்... மாணவர்களின் தொழில்முனைவோர் திறனை வெளிப்படுத்திய ‘ராயல் எக்ஸ்போ 2026’!
100-க்கும் மேற்பட்ட அங்காடிகள்... மாணவர்களின் தொழில்முனைவோர் திறனை வெளிப்படுத்திய ‘ராயல் எக்ஸ்போ 2026’!

கோவை:

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் BBA (CA) மற்றும் BBA Logistics துறைகள் சார்பில், ‘ராயல் எக்ஸ்போ 2026’ நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கொடிசியா (CODISSIA) நிர்வாகக் குழு உறுப்பினரும், அமிர்தலட்சுமி சிஎன்சி காம்போனன்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான கே. தினேஷ் குமார் கலந்து கொண்டார்.

இந்துஸ்தான் கல்லூரி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன், துணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு. பொன்னுசாமி, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஏ. சண்பகவல்லி, இந்துஸ்தான் சர்வதேசப் பள்ளியின் மையத் தலைவர் சுஜா டி. நாயர் மற்றும் BBA (CA) & BBA Logistics துறைத் தலைவி  ஆர். சபிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

‘ராயல் எக்ஸ்போ 2026’ நிகழ்ச்சியில் BBA (CA) மற்றும் BBA Logistics துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்ட அங்காடிகளை அமைத்து, தங்களது மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் திறன்களை வெளிப்படுத்தினர்.

மேலும், கோவையைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று, தொழில் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் சார்ந்த தங்களது திறன்களை மேம்படுத்திக் கொண்டனர்.

மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையிலும், நடைமுறை ரீதியான தொழில் அனுபவத்தை வழங்கும் வகையிலும் நடைபெற்ற இந்த எக்ஸ்போவுக்கான ஏற்பாடுகளை துறைத் தலைவி ஆர். சபிதா தலைமையில் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0