சிவசேனா கோவை மாவட்ட தலைமை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா! பக்தர்கள் திரளாக பங்கேற்று விநாயகரை வழிபாடு!
கோவை மாநகரில், சிவசேனா கட்சி கோவை மாவட்ட தலைமை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ஹரி பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த விழா, விநாயகர் பிரதிஷ்டை மற்றும் யாக வேள்வியுடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவில், சிவசேனா கட்சி தமிழ்நாடு தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. முருகன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து, கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், கோவை மாவட்ட தலைவர் நாகராஜன், மாநில அமைப்பு செயலாளர் செந்தில், கோவை மண்டல தலைவர் ஹரிஹரன், கோவை மாவட்ட துணைத்தலைவர்கள் தங்கராஜ் மற்றும் கிருஷ்ணன், மாவட்ட தலைவர் மருது, மாவட்ட செயலாளர் புகழரசன், மற்றும் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிவசேனா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, விநாயகரை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.விழாவின் நிறைவாக, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழா, பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0