இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா...!

Oct 29, 2026 - 09:31
 0  11
இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா...!
இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா...!
இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா...!
இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா...!
இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா...!

கோவை இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா இரத்தினம் கிராண்ட் ஹாலில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சட்டத்தின் முக்கியத்துவம், சட்ட விதிமுறைகள் மற்றும் சட்டக் கல்வியின் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கிப் பேசினார். மாணவர்கள் சட்ட அமைப்பின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதுடன், சட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள இக்கல்வி சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இரத்தினம் குழுமத்தின் தலைவரும், இரத்தினம் குளோபல் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான முனைவர் மதன் ஆ. செந்தில் விழாவிற்குத் தலைமை தாங்கினார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நவீன தொழில்நுட்ப அறிவுடன் சட்டக் கல்வியை இணைத்துப் பயில்வது காலத்தின் தேவையாகும் என்றும் வலியுறுத்தினார்.

விழாவில் மூத்த வழக்கறிஞர் என்.வி. நாகசுப்பிரமணியம், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். பாஸ்கர், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் ஜே.வி. ராஜ், கே.எஸ். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.

இரத்தினம் குளோபல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ச. கிருஷ்ணராஜ் வரவேற்புரையாற்றினார். இரத்தினம் குழுமத்தின் துணைத்தலைவர் முனைவர் ஆர். மாணிக்கம், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். குழுமத்தின் இயக்குநர் திருமதி க்ஷிமா செந்திலும் விழாவில் கலந்து கொண்டார்.

சட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், இரத்தினம் சட்டப்பள்ளி சார்பில் ரமணி & சங்கர், KSR & Co. மற்றும் சுரானா & சுரானா நிறுவனத்தின் கோவை கிளை உள்ளிட்ட சட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மலேசியாவின் பிரிக்ஃபீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மற்றும் HELP பல்கலைக்கழகமும் இந்நிகழ்வில் இணைந்தன.

விழாவின் ஒரு பகுதியாக, “சட்டத்திற்கு எதிராக எழும் விமர்சனங்கள்” என்ற தலைப்பில் வழக்கறிஞர்கள் பங்கேற்ற குழு விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மாதிரி நீதிமன்ற நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது சட்ட அறிவையும் வழக்காடும் திறனையும் வெளிப்படுத்தினர்.

இரத்தினம் கல்விக்குழுமத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய சட்டப்பள்ளி, மாணவர்களுக்கு சட்டக் கல்வி மற்றும் தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0