100+ கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு! கோவையில் நெகிழ வைத்த கனிமொழி சந்தோஷ் MLA!
கோவை வடமதுரையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் சார்பில், 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.வடமதுரை ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது.கர்ப்பிணி பெண்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கர்ப்பிணி பெண்களுடன் அவர்களது குடும்பத்தினரும் விழாவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ்,“வளைகாப்பு என்பது பெண்களுக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல. கர்ப்பிணி பெண்களை கவனிக்கும் பொறுப்பு கணவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் உள்ளது.
ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தப்படும் நிலையில், இந்த காலகட்டத்தில் தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மனைவியின் உடல்நலத்துடன், வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டும். சத்தான உணவு, போதிய ஓய்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் மனநிம்மதி என அனைத்து வகையிலும் கணவர்கள் தங்களது மனைவிக்கு துணையாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.மேலும், பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நலன்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
‘அனைத்தும் அனைவருக்கும்’ என்ற வகையில் மக்கள் நலனை முன்னிறுத்தி மக்கள் முதல்வர் விஜய் செயல்பட்டு வருவதாகவும், இங்கு பங்கேற்றுள்ள ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் தவெக அரசும், மக்கள் முதல்வர் விஜயும் எப்போதும் உடனிருப்பார்கள் என்ற நம்பிக்கையையும் டாக்டர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0