அமைச்சர் வன்னியரசை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
சமூகவிடுதிகளில் மாணவர்களுக்கு மாணவிகளுக்கு மாட்டிறைச்சி தருவதை குறித்து சமூக நீதி அமைச்சர் வன்னியரசு பேசியதை கண்டித்து கோவையில் விஸ்வகர்மா #ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாபுஜி சாமிகள்# தலைமையில் புதிய தமிழகம் கட்சி விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சி அனைத்து இந்து அமைப்புகள் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவை சங்கம் அருகில் நடைபெற்றது ..... விழாவிற்கு தலைமையாக ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமிகள் பேசும் பொழுது கோமாதா என்பது தமிழ் மக்களின் குலமாதா தமிழர்கள் பண்டைய காலம் முதற்கொண்டு தன்னுடன் இல்லத்தில் குழந்தைகளுக்கு பால் தேவைக்கு வேண்டிய விவசாயிகள் உழவுத் தொழிலுக்கும் உறுதுணையாக இருப்பது பசுவும் காளையும் என்பது அனைவருக்கும் தெரியும் தமிழர்கள் வாழ்வில் வீரத்திற்கு அடையாளமாக ஜல்லிக்கட்டுலும் காளை மாடு முதன்மையாக இருக்கின்றது தமிழர் பண்பாட்டில் மாட்டுக்கறி என்பது கிடையாது அப்படி இருக்கின்ற சூழ்நிலையில் மாணவர்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பேசியது கண்டனத்திற்குரியது மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் வன்னியரசை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் .
தமிழகமெங்கும் புதிய தமிழகம் கட்சி ஏற்பாட்டில் மாவட்டம் தோறும் இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது தமிழகத்தில் பசுவதை தடைச் சட்டம் அமல்படுத்த வேண்டும் மேலும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி கடையை அகற்ற வேண்டும் விஸ்வகர்மா சமுதாய மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய ஐந்தொழில் நல வாரியம் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தில் உள்ளூர் விஸ்வகர்மார்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கையை ஜகத் குரு ஸ்ரீ பாபுஜி சாமிகள் பேசினார் ...... இந்த நிகழ்வில் முன்னிலை ஏற்பாடு செய்த புதிய தமிழகம் கட்சி சங்கர் குரு அவர்கள் மாவட்ட செயலாளர் பிரேம் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சியின் சார்பாக மாநில நிர்வாகிகள் வரதராஜன் ரிக்ரவி சோமசுந்தரம் விஸ்வநாதன் குருசாமி நடராஜ் நாச்சிமுத்து. திருப்பூர் மகாலிங்கம் சுரேஷ் பிரேமலதா வீரமணி ..வேலு.. மலுமிச்சம்பட்டி செல்வராஜ்.மற்றும் இந்து முன்னணி மூகாம்பிகை மணி இந்து மக்கள் கட்சி ஓம்கார்பாலாஜி சிவசேனா தலைவர் முருகன் ரமேஷ் பாபுஹனுமான் சேனா பிரேம்குமார் அகில பாரத அனுமான் சேனா தலைவர் சிட்கோ ராஜேந்திரன் . விவேகானந்தர் பேரவை ஜலந்திரன் வடவள்ளி கனகராஜ் மற்றும் நாகசக்தி அம்மன் தியான பீடத்தினுடைய பக்தர் பேரவை பொறுப்பாளர்கள் மகளிர் அணி பலர் கலந்து கொண்டனர் .
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0