ராதிகா சரத்குமார்-கோபிநாத் பங்கேற்பு! கோவையில் கோலாகலமாக திறக்கப்பட்ட ஏ4 பெர்டிலிட்டி சென்டர்...!

Oct 5, 2026 - 16:20
 0  2
ராதிகா சரத்குமார்-கோபிநாத் பங்கேற்பு! கோவையில் கோலாகலமாக திறக்கப்பட்ட ஏ4 பெர்டிலிட்டி சென்டர்...!
ராதிகா சரத்குமார்-கோபிநாத் பங்கேற்பு! கோவையில் கோலாகலமாக திறக்கப்பட்ட ஏ4 பெர்டிலிட்டி சென்டர்...!
ராதிகா சரத்குமார்-கோபிநாத் பங்கேற்பு! கோவையில் கோலாகலமாக திறக்கப்பட்ட ஏ4 பெர்டிலிட்டி சென்டர்...!

கோவை ஹோப்ஸ் பகுதியில், முன்னணி கருத்தரிப்பு சிகிச்சை மையமான ஏ4 பெர்டிலிட்டி சென்டரின் 25வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.புதிய கிளையை பிரபல திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் மற்றும் பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், பேச்சாளருமான கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஏ4 பெர்டிலிட்டி சென்டர் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் அசோக் குமார், ஏ4 பெர்டிலிட்டி சென்டர் குளோபல் கிளினிக் இயக்குனரும், இணை நிர்வாக இயக்குனருமான டாக்டர் அருணா அசோக் ஆகியோர் கூறியதாவது:கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஏ4 பெர்டிலிட்டி சென்டர், ஒரே கூரையின் கீழ் அனைத்து வகையான கருத்தரிப்பு சிகிச்சைகளையும் வழங்கும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஐ.வி.எப்., ஐ.யூ.ஐ., ஆண் மற்றும் பெண் குழந்தைப்பேறு சிகிச்சைகள், கருமுட்டை, விந்தணு மற்றும் கரு உறைவிப்பு, கருத்தரிப்புத் திறன் பாதுகாப்பு, மரபணு சோதனை, லேப்ராஸ்கோபி, நன்கொடையாளர் மற்றும் கரு நன்கொடை திட்டங்கள், பாலிகுலர் கண்காணிப்பு, ஓவுலேஷன் இன்டக்ஷன் உள்ளிட்ட பல்வேறு நவீன சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை திட்டங்களை வடிவமைத்து வழங்குவதுடன், அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் மேம்பட்ட ஐ.வி.எப். தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிறப்பான கருத்தரிப்பு சிகிச்சையை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.மேலும், கோவையை தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளிலும் புதிய கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0