கோவையில் நரம்பியல் சிகிச்சைக்கு புதிய சக்தி! 14 படுக்கைகளுடன் அதிநவீன ICU தொடக்கம்!

Oct 5, 2026 - 20:17
 0  2
கோவையில் நரம்பியல் சிகிச்சைக்கு புதிய சக்தி! 14 படுக்கைகளுடன் அதிநவீன ICU தொடக்கம்!
கோவையில் நரம்பியல் சிகிச்சைக்கு புதிய சக்தி! 14 படுக்கைகளுடன் அதிநவீன ICU தொடக்கம்!
கோவையில் நரம்பியல் சிகிச்சைக்கு புதிய சக்தி! 14 படுக்கைகளுடன் அதிநவீன ICU தொடக்கம்!

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், நரம்பியல் நோய்களுக்கான 14 படுக்கைகள் கொண்ட அதிநவீன நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த தீவிர சிகிச்சைப் பிரிவை, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் திறந்து வைத்தார்.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் சம்பத்குமார்,தமிழகத்தில் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டு நிதி உதவி, 5 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஏராளமானோர் பயனடைந்து வருவதாக கூறினார்.

விபத்து ஏற்பட்டால் முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியம் என்றும், இந்த காலகட்டத்தில் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அவசர உயர் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுவதால், விபத்து உயிரிழப்புகள் குறைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.கோவை மருத்துவத் துறையிலும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை ராயல் கேர் தொடர்ந்து அறிமுகப்படுத்துவது பெருமைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ராயல் கேர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன், நோயாளிகளின் நலனுக்காக உலகின் முன்னணி மருத்துவ தொழில்நுட்பங்களை இந்திய அளவில் முன்னோடியாக கொண்டு வருவதாக தெரிவித்தார்.நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் சிவக்குமார், புதிய 14 படுக்கைகள் கொண்ட பிரிவில் வழங்கப்பட உள்ள சிகிச்சைகள் மற்றும் நவீன மருத்துவக் கட்டமைப்புகள் குறித்து விளக்கினார்.விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என். எம். சுகுமார், மருத்துவ இயக்குநர் பரந்தாமன் சேதுபதி, சி.ஓ.ஓ. மணி செந்தில்குமார், மார்க்கெட்டிங் பிரிவு சீனியர் பொது மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0