ஃபெமினா – விகாஷினி பியூட்டி பார்லர் புதிய கிளை திறப்பு...!
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஃபெமினா ஹைடெக் பியூட்டி பார்லர் மற்றும் விகாஷினி பியூட்டி பார்லர் & பிரைடல் ஸ்டுடியோவின் புதிய கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
புதிய கிளையை வி.ஜி. விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கீதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் விகாஷினி பியூட்டி ஸ்டுடியோவைச் சேர்ந்த லக்ஷ்மி மனோகரன் உடனிருந்தார்.
மேலும், ஜெம் மருத்துவமனையைச் சேர்ந்த பிரேமா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு புதிய கிளையை வாழ்த்தினர்.
புதிய கிளையில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அழகு மற்றும் மணப்பெண் அலங்கார சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கிளை திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.
புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளதால் பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0